திருவிழா உற்சாகத்தில் இருக்கிறார். நெல்சன் திலீப்குமார். இருக்காதா பின்னே, விஜய்யின் 'பீஸ்ட்' முடித்துவிட்டு ரிலீஸ் தேதிக்கு கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டிருக்கிறார். "விஜய் சார் படம்னா அதுக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும்னு நல்லா தெரியும். அதுக்காக நல்லபடியா உழைச்சிருக்கோம். சன் பிக்சர்ஸ், விஜய் படம் என்ற விஷயமே எனர்ஜி ஏத்த, மேலும் ரசிச்சு வேலை செஞ்சிருக்கோம். என்னுடைய முந்தைய படங்களான ‘கோலமாவு கோகிலா' மாதிரியோ ‘டாக்டர்’ போலவோ இந்த 'பீஸ்ட்' கிடையாது. இது டோட்டலாகவே வேற பிலிம், ஆக்ஷன் பட்டையக் கிளப்பும். கலகல காமெடியும் இருக்கும். இதுவரைக்கும் வந்த என்னோட படங்களை மனசுல வச்சு, 'பீஸ்ட்'டைப் பார்க்கும்போது அந்த வித்தியாசம் நல்லாத் தெரியும்" - உற்சாக டெம்போ குறையாமல் பேசுகிறார். " ‘அரபிக்குத்து', 'ஜாலிலோ ஜிம்கானா' எனப் பாடல்கள், விஷுவல்கள்னு கலர்ஃபுல்லா அசத்துது... விஜய் தாண்டியும் மேஜிக் தெறிக்கும்போல..?" "சின்ன வயசில் இருந்தே நான் விஜய் ரசிகர்னால, அதையும் மைண்ட்ல வச்சு படம் பண்ணியிருக்கேன். இண்டஸ்ட்ரீல அவருக்கு இருக...